Friday, June 25, 2010

Share

என் தோழி....

குறையில் நிறை கண்டு
என்னில் உன்னைக் கண்டு
உன்னில் என்னைக் கண்டு
என் இன்பத்தில் இன்பம் கண்டு
துன்பதில் துன்பம் கொண்டு
எனக்கு மூன்றாம் கையாய்
விளங்கும் தோழியே..

இசையாய் நான் இருந்தால்
வரியாய் நீ வருகின்றாய்...

மழையாய் நான் வந்தால்
குளமாய் மாறி என்னைத்
தாங்குகின்றாய்...

என் மனதின் காயத்திற்கு
மருந்தாய் உன் அன்பெனும்
தென்றலாய் வந்து வருடிச்
செல்கின்றாய்....

காற்றுக்கு வேலி போடுவது போல்
உன் நட்புக்கு வேலி போட முனைந்தேன்
உயிருக்குள் கலந்து விட்டாய்....

பூவின் வாசமாய் எனக்குள்
வாசம் வீசுபவளே ஏழெழு
ஜென்மங்கள் வேண்டும் எனக்கு
உன் தோழியாய் உன் தோள்
சாய்ந்திட...

பரந்து விரிந்திருக்கும் பூமியில்
தனித்திருக்கும் என்னோடு
சேர்ந்து பறக்கும் பட்டாம் பூச்சியே
என்றும் உன்னோடு இணைந்திருப்பேன்
என் ஆயுள் வரை....

5 comments:

சசிகுமார் said...

முதல் முறையாக உங்கள் தளத்திற்கு வருகிறேன் என்று நினைக்கிறேன். கவிதை அருமையாக உள்ளது ஆகா இனிமேல் பாலோ செய்ய வேண்டியது தான்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கு நன்றி நண்பரே. தொடர்ந்து வாருங்கள்

சசிகுமார் said...

தாங்கள் பதிவுலகிற்கு புதியவர் என்று நினைக்கிறேன் தங்களுக்கு ஏதேனும் பிலாக்கர் டிப்ஸ் தேவைப்பட்டால் காணுங்கள்
www.vandhemadharam.blogsot.com

Unknown said...

hia pirasha acca very nice kavithai. i like friendship poems. keep it up.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கு நன்றி.........aruntha