Monday, February 7, 2011

Share

அன்று .! இன்று.!

அன்று .!
கண்ணாடி யன்னலூடே 
பார்வையினை சிதறவிட்டு
முன்னாடி நடந்தவற்றை
தன்  நாடியில் கைவைத்து
தன் தலையெழுத்தை எண்ணி
தனித்திருந்து யோசித்தாள்.!
இன்று.!
முன்னாடியெல்லாம் யன்னலுனூடே
அவள்  கண் நாடி நிற்பது 
தன்னவன்   வருகையினை..
இந்நாளில் அவள் கண்கள் நாடி நிற்பது
கண்ணாளன் வருவானா? இல்லையேல்
காத்திருப்பு தொடருமா?
மனப்பாரம் கூடியே 
மனச்சோர்வில் அவள்.!
அன்று .!
கடற்கரை மணலிலே
இரு கைகோர்த்து நடந்து.!
இம்சைகள் பல புரிந்து
இரு இதயம் பேசிடும் எதிர்கால 
வாழ்வை எண்ணி..
இன்று.!
இருவர் கைகோர்த்து 
இசைந்து நடந்த கடற்கரையில்
இன்னிசையாய் கடற்காற்று 
கீதமாய் அவன் நினைவு
கீறுகின்றது அவள் மனதை...!
அன்று .!
அவளுடன் அவன் இருக்கையில் 
அன்பெனும் மழையிலே
நித்தம் நனைந்தாள் மகிழ்விலே.!
இன்று.!
 தென்றல் வருடையில்
உள்ளத்து நினைவுகளில்
தென்னவன் வருடலாய்
சிலிர்த்திடும் அவளுள்ளம்...!
 அன்று .!
 இரவினிலே தனிமை தேடி
தொலைபேசி வழி அவனை தேடி
செவிவழி அவன் குரல்கேட்டு
செவ்விதழில் புன்னகையும்
சேர்ந்திருக்கும் என்நாளும்.!
 இன்று.!
கட்டுமரமாய் கவலைகள் சுமந்து
பகலெனும் நதிகடந்து
இரவெனும் கரைசேர்ந்து
தனித்திருந்து அழுதிடுவாள்...
யாரறிவார் அவள் துன்பம்.!

அன்றய நினைவுகளை மீட்டிய படி அவள் தன் வேலைகளை செய்து முடித்தாள்.
                     ஜெனனி குடும்பத்தில் முத்த பொண்ணு 2 தம்பி 1 தங்கை. பெற்றோர் சொல்லே வேதவாக்காய் ஏற்று நடப்பவள். படிப்பே உலகமென இருந்தாள். கிராமத்தில் பள்ளியில் படித்து  சிறந்த பெறுபேறுகள் பெற்றாள்.  மேற்படிப்பிற்காக நகரம் செல்லவேண்டும். மேற்படிப்பை தொடர முடியுமா என அவள் மனதுள் கேள்விகள் பல குடும்ப வறுமையே அதற்கு காரணம். தந்தை மகளின் படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டினார். அவளின் மேற்படிப்பிற்காக தந்தை தன் கெளரவத்தை தள்ளி வைத்து உடன் பிறப்பிகளிடம் உதவிகேட்டார்  அவர்கள் மறுத்தனர். தந்தை மனம் சோரவில்லை தொடர்ந்து தனது நண்பன் ஒருவனிடம் உதவி கேட்டார் கிடைத்ததும் குடும்பமே சந்தோஷத்தில்.  
                                                                                இருப்பினும் பணத்தைவிட பெரும் பிரச்சனையாக அவள் நகரத்தில் தங்குமிடப் பிரச்சனை நகரத்தில் உறவுகள் யாருமில்லை. பல்கலைகழக விடுதியில் தங்க முடிவுசெய்து மேற்படிப்பை தொடங்க ஆரம்பித்தாள்....

(தொடரும்......)

45 comments:

கலையன்பன் said...

இது என்ன கவிதை கதையா?
புதுமை!
தொடர்ந்து அச்த்துங்கள்!

Unknown said...

nice! story? :-)

ம.தி.சுதா said...

அருமை அருமை.. காத்திருக்கிறேன்....

ம.தி.சுதா said...

சமர்ப்பியுங்களேன்....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கலையன்பன் நன்றி கலையன்பன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜீ... நன்றி ஜீ யா கதை முடியுமா ஏன் முயற்சித்துப் பார்க்கின்றேன் :)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ம.தி.சுதா நன்றி சுதா தொடர்ந்து பாருங்கள்...கருத்தை தாருங்கள்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ம.தி.சுதா சமர்ப்பித்தள்ளேன்

வைகை said...

புதுமையான முயற்சி! நல்லாயிருக்கு!

எஸ்.கே said...

நன்றாக ஆரம்பிக்கிறது கதை சகோதரி! ஆனால் சிறியதாக உள்ளதே, அடுத்த பதிவுகளில் சிறிது பெரிதாக போடுங்கள்!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@வைகை நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@எஸ்.கே நன்றி சகோதரா.. நிச்சயமாக அடுத்த பதிவு பெரிதாக வரும்..

HamSon said...

வித்தியாசமா எல்லாம் யோசிக்கிறீங்க பிரஷா. ரூம் போட்ட யோசிப்பீங்களா?

குறையொன்றுமில்லை. said...

அன்றும் இன்றும்என்றும் அழகு கவிதை.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

different.... story with poem.congratulations.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஹம்சன் ரூம் போட தேவைில்லை கம்ஷன் நான் இருப்பதே குகைகுள் தானே...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@மாத்தி யோசி மிக்க நன்றி சகோ...

Chitra said...

அன்று .!
அவளுடன் அவன் இருக்கையில்
அன்பெனும் மழையிலே
நித்தம் நனைந்தாள் மகிழ்விலே.!
இன்று.!
தென்றல் வருடையில்
உள்ளத்து நினைவுகளில்
தென்னவன் வருடலாய்
சிலிர்த்திடும் அவளுள்ளம்...!


....her feelings are being expressed very well. மிகவும் அழகாக எழுதுறீங்க.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Chitra மிக்க நன்றி சித்திராக்கா...

S Maharajan said...

அருமை..

Yaathoramani.blogspot.com said...

அழகான துவக்கம்
அதிக எதிர்பார்பை ஏற்படுத்திப் போகிறது.
தொடர வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

அட வித்தியாசமா இருக்கே.......!!!
அசத்தலா இருக்கு...

சிந்தையின் சிதறல்கள் said...

அருமையான படைப்பு தொடரட்டும் தோழி
வித்தியாசமான பார்வை

சிவகுமாரன் said...

அருமை.
கவிதையும்
கதையின் தொடக்கமும்
எதிர்பார்ப்பை தூண்டுகின்றன.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Lakshmi நன்றி லக்ஸ்மி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@S Maharajan மிக்க நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Ramani நன்றி ஜயா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@MANO நாஞ்சில் மனோ நன்றி நண்பரே..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@நேசமுடன் ஹாசிம் நன்றி நேசமுடன் ஹாசிம்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சிவகுமாரன் நன்றி சிவகுமாரன் தொடர்ந்து பாருங்கள் கருத்தை தாருங்கள்...

Philosophy Prabhakaran said...

கொஞ்சம் புதுமையா இருக்கு மேடம்... கதையை கண்டின்யூ பண்ணுங்க...

Anonymous said...

super,good idea.

Arun Prasath said...

கவிதையில் கதையா... பாப்போம் எப்டி போகுதுன்னு.... இந்த பார்ட் நல்லா இருக்கு..

'பரிவை' சே.குமார் said...

தொடர்ந்து அசத்துங்க...

ஆனந்தி.. said...

யக்கா..நேத்து வோட்டு மட்டும் போட்டு போனேன்க்கா..:)) நேரமில்லை தங்கோச்சி..வீட்டு வாலுக்கு பரிச்சை..அதான்..தங்கச்சி ப்லாக் கில் வந்து கம்ப்ளைன் பண்ணிட்டு போயிருக்குன்னு உடனே ஓடிவந்தேன்...அட..அன்றும்,,இன்றும் னு காட்சிகளை விளக்கி..இப்போ கதை போகுது ஜோரா...ம்ம்..பட்டைய கிளப்புரிங்க தங்கமே...கலக்கு..கலக்கு...

ஆதவா said...

நன்றாக இருக்கிறது. அதிலும் படத்துக்கு அழகாகப் பொருந்தி எழுதியிருப்பது அருமை.
தளம்தான் ஓபன் ஆக நேரமெடுக்கிறது.

ஆயிஷா said...

அருமை.தொடர்ந்து அசத்துங்க.வாழ்த்துக்கள்.

சத்ரியன் said...

முதல்முறை உங்க வலைப்பக்கம் வந்தேங்க. வந்ததும் வசமா மாட்டிக்கிட்டேன். அட, அழகா கவிதையும் இணைப்பா கதையும் படிச்சி அசந்துட்டேன். அதான்.

சி.பி.செந்தில்குமார் said...

essay with rhyme.. good

ஹேமா said...

படங்களும் கதையும் கவிதையுமாக அசத்துறீங்க பிரஷா.தொடருங்கள் !

Unknown said...

sister mee the first..

சக்தி கல்வி மையம் said...

தோழி பிரஷா சொன்னது…

அருமையா எழுதியுள்ளீரகள்....
/////

என்னையும் ஞாபகம் வைத்துகொண்டதற்கு நன்றி..
என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

நிரூபன் said...

கதையுடன் கவிதை... ஒரு இனிய முயற்சி, மனதினுள் அடுத்த அங்கம் பற்றிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்துகிறது.

கவிதை பூக்கள் பாலா said...

"கட்டுமரமாய் கவலைகள் சுமந்து
பகலெனும் நதிகடந்து
இரவெனும் கரைசேர்ந்து
தனித்திருந்து அழுதிடுவாள்...
யாரறிவார் அவள் துன்பம்.!"
வரிகள் அருமை தோழியே

Unknown said...

Nice sotry. plz continue quickly.