Wednesday, September 26, 2012

Share

துடிக்குதம்மா என் உள்ளம்



ஆயிரம் துன்பங்கள்
அயராது தாக்குது
ஆடித்தான் போகின்றேன்
அன்னையே உன்னை எண்ணி...
பிள்ளையாய இருக்கையில்
அம்மா உங்கள் 
கஸ்ரம் புரியவில்லை..
அன்னையாய் நானின்று ஆனபின்பு
பிள்ளையாய் உன்னை தாங்க 
ஆசையின்று...
அழைக்கும் தூரத்தில்
நீங்கள் இல்லை...
துடிக்குதம்மா என் உள்ளம்
விம்மி அழும் உன் குரல் கேட்டு....!!!
Share

அனைத்தும் அழகுதான்.



முள்ளில் பூக்கும்
ரோஜாவும் அழகு தான்
தொடும் வரை..
உயர்ந்த நிக்கும்
மலைத் தொடர்களும்
அழகு தான் 
வெடிக்கும் வரை...
சிரிக்கும் மனிதர்களின்
மனங்களும் அதிசயம் தான்
அதன் வலிகளை 
அறியும் வரை... 

Tuesday, September 25, 2012

Share

உள்ளம்


கொட்டிக் கிடக்கின்றன
சந்தோஷங்கள்
என்னைச் சுற்றி
இருந்தும்
தொலைவாகிப் போன
உன்னை 
தொட்டிட துடிக்குது
என் உள்ளம்.
Share

எப்போ என்னை விட்டு செல்வாய்??


வேதனைகளை 
வேரோடு கிள்ளி 
வீசிட நினைக்கிறேன் 
இருந்தும்,
வீசும் காற்றாய் என்னை 
தொட்டுச் சென்றிடும்
ஆசைகளுக்கு தூபமிட்டு
அமைதியை சீர்குலைக்கும்
துன்பமே!
எப்போ என்னை 
விட்டு செல்வாய்??

Tuesday, September 18, 2012

Share

வாழ்க்கைச் சக்கரத்தில்


மனிதனே!
வாழ்க்கைச் சக்கரத்தில்
வந்து போகும்
வரைமுறைகள் பலவிதம்


வாழும்வரை 
விரோதங்களை ஒதுக்கிவிடு-வீண்
விவாதங்களை தவிர்த்திடு...
வேற்றுமைகளை விலக்கிடு-பல
வேஷங்களை களைந்திடு...
பலருக்கு உதவிடு-உன்
பாவங்களை கழிவிடு..

வஞ்சத்தை மறந்திடு-சூழ்ந்த
வஞ்சகர்களை களைந்திடு...
சுயநலத்தை தவிர்த்திடு-உன்
சுற்றத்தை மதித்திடு...
நம்பிக்கையை வளர்த்திடு-உண்மை
நட்புக்களை மதித்திடு...
துரோகத்தை மறந்திடு - உன் 
துரோகிகளை மன்னித்திடு...

தவறுகளை உணர்ந்திடு
தனிமையை தவிர்திடு
பிழைகளை உணர்ந்திடு -பிறர் 
பிழைகளை மன்னித்திடு...
பெருமையை துரத்திடு-பிறர்
பெருமைகொள்ளும்படி வாழ்ந்திடு...
தலைக்கணத்தை தவிர்திடு-பிறருடன்
தன்மையாய் நடந்திடு..

அன்னையை மதித்திடு-அன்பால்
அனைத்தையும் வென்றிடு..
உறவுகளை மதித்திடு-உன்
உரிமைகளை பெற்றிடு...
இன்றிருப்போர் நாளையில்லை
வந்த வழி எப்போ செல்வோம்
யாருக்கும் தெரியாது..
ஒற்றுமையை வளர்திடுவோம்.
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம்

Tuesday, September 4, 2012

Share

அலைகின்றேன்



தேடி
அலைகின்றேன்
தொலைந்து போன
வாழ்வின் தடங்களை...
எங்கும் 
வெறுமையாய்
சிதறிக் கிடக்கின்றன
தவற விட்ட
சந்தர்ப்பங்களும்
காலம் எமக்கிட்ட 
சாபங்களும்...
Share

குழந்தை முகம்


புன்முறுவல் 
அள்ளி தெளிக்கும்
குழந்தை முகம்
காணுகையில்
தெய்வமே 
நேரில் வந்து 
தரிசனம் தருவதுவாய் 
சந்தோஷம்
 ஊற்றெடுக்கும்....
அன்னையவள்
 உள்ளமதில்...
Share

என் அன்னை...



குழந்தையின் நான் 
அழுகையில்
அன்பாய் அரவணைத்து
ஆசையாய் முத்தமிட்டு
இனிய கதைபேசி
தாலாட்டும் தான் பாடி
உறங்கிட செய்திடுவாள் 
என் அன்னை...
Share

அழையா விருந்தாளி



இன்பங்கள் என்று
ஆடைகட்டி
அலங்கரித்து
ஆடித் திரிந்த எல்லாம்
ஒவ்வொன்றாய்
விலகிச் செல்கின்றாலும்
துன்பங்கள் என்னும்
அழையா விருந்தாளி
அரவணைத்துக் கொள்கி்ன்றது
வாழ்வின் முடிவு வரை....
Share

அப்பாவின் பிரிவு.




நிச்சயமற்ற
இந்த உலகில்

தினம் தினம்
வந்து போகும் 
ஆயிரம் உறவுகள்


கருவறையில் 

களம் அமைந்து
வீரியம் மிக்க வித்தாக
அம்மாவுக்கு எனை சொந்தாக
புது உலகம் படைத்தவர் அப்பா.

ஈரைந்து மாதங்கள்
ஓர் உடலில் 
ஈருயிராய் வாழ்ந்துreep
தொப்புள் கொடியறுந்து
தரை விழும் நேரம்
தலைமறைவானது
அப்பா எனும் உறவு

பாசம் எனும் பிணைப்பில்
அப்பாவின் அரவணைப்பு
அஸ்தமனமானதில்
அவதியுறும் உறவாய்
அம்மாவும் நானும்

அம்மாவின்
கண்களின் ஓரம் பூக்கும் 
கண்ணீர் துளிகளின் 
வலி சொல்லும்
தொலைவாகிப் போன
அப்பாவின் பிரிவு.

Share

தாயாய் நானும் ...



கருவறை சுமந்து
உன் துயர் தீர்த்து
புவிதனில் தவழ விட்டு
பரலோகம் நீ போனாய்...
தலைபிள்ளையா நானும்
தரணியில் உதத்தால்
உன் பொறுமையின் வடிவில்
குடும்பம் எனும்
சுமை சுமக்கிறேன்
தாயாய் நானும் 
Share

உன் முக நிழலில்...



அம்மாவாக
 நீ இருப்பதால்
ஒளி தரும் 
உன் முக நிழலில்
கரையோதுங்கும் 
நேரங்களில்
இன்பத்தில் 
தள்ளாடும் 
குழந்தையாய் நான்.
Share

அத்மாத்தமான உறவில்



நிலவிலும்
பிரகாசமான நீ
என் கையில்
தவழும் போது
குழந்தையாய் நீயும்
தாயாய் நானும் மாறும்
அத்மாத்தமான உறவில்
திளைக்கும் நம் 
காதல்.
Share

என் உள்ளம்...!!!



கடும் வரட்சிக்குப் பின் 
பெய்த மழை போல
உன் பார்வை பட்டதினால்
செழிப்படைந்தது 
புதிதாய் பிறப்பதாய் 
ஆர்ப்பரிக்கின்றது 
என் உள்ளம்...!!!
Share

என் வாழ்வு...



பலருக்கு தெரிந்திட 
என் வாழ்வு
பௌர்ணமியாய்
மிளிர்கின்றது...
எனக்கு மட்டுமே
தெரிந்திடும் 
என் வாழ்வு 
தேய்பிறையென...
Share

என்னுள்ளே .....



பாசம் எனும் நூலெடுத்த
வானுயர பறந்தவளை
நூலை அறுத்து
பாதாளத்தில் தள்ளிவிட்டாய்
தனிமையிலே
பரிதவிக்கும் என் உள்ளம்
யாருக்கு புரிந்திடும்???
என்னுள்ளே யாவும்
 புதைந்து போகட்டும்
Share

வலிகளாய் நீ.


என் 
கடந்த கால
நாட்குறிப்புகளை 
புரட்டிப் பார்க்கிறேன்
இன்பமான நாட்கள்
அனைத்தும்
உன் பெயரையே
பதிவு செய்துள்ளன.
ஆனால்..
இன்றைய தினங்களை
பதிவு செய்ய முனைகிறேன்
யாவும் வலிகளாய்
நீ.