Thursday, January 24, 2013

Share

அம்மா



துன்பங்களை
சபாமாய் அளித்த
கடவுள்!
அம்மா எனும்
உறவை
வரமாய் அளித்தாரோ?
வலியின்
சுமைதாங்கியான
மனிதன்
தலை சாயும்
தாயின்மடி
பிரபஞ்சத்தில்
முதல் அதிசயம்!

-தோழி பிரஷா-
Share

அனுபங்கள்


வாழ்வில் வந்த போகும்
இன்பங்களும் துன்பங்களும்
ஒவ்வொரு வித பாடங்களை 
கற்று கருவதோடு
சுற்றங்களையும் புரிய
வைத்தே செல்கின்றது...!

அனுபங்கள் எம்மை 
அசைத்து பார்த்தலும்
எம்மை எமக்கு புரிய 
வைத்து செல்கின்றது...!

-தோழி பிரஷா-
Share

பாவப்பட்ட ஜீவனாய்



விடியாத இரவுகளில்
இருண்டே கிடக்கும்
வாழ்வின் உண்மைகள்
சொல்ல மறந்த கதையாய்
தொடர்கிறது.
இனிக்க இனிக்க 
என்னுள் புதையுண்டு
அவனின் பரிசங்கள்
இன்று
வலிக்க வலிக்க
வெட்டி எடுக்கப்பட்டதாக
காலத்தின் கோலம்.
நினைவுகள் எனும்
ஆகுதியில்
நித்தம் நீந்தித் 
தவிக்கும்
பாவப்பட்ட ஜீவனாய்
என் உள்ளம்.

-தோழி பிரஷா-

Tuesday, January 22, 2013

Share

என் ஆயுள் வரை..!


“உன் அனுமதியின்றி
எனக்குள் உன்னை
இறுக பற்றி கொண்டேன்..!
ஒரு தலைக்காதலாய்
இன்று என் காதல்..!
என் மீது உனக்கும் காதலுண்டா?
ஆம் எனும் சாவியினை தந்துவிடு
அதற்காக காத்திருப்பேன் 
என் ஆயுள் வரை..!

-தோழி பிரஷா-
Share

பெண்ணே!

பெண்ணே!
உன்னை
நிலவு என்றேன்
அதனால் தான் 
என்னமோ
இன்பங்களையும்
துன்பங்களையும்
மாறி மாறி 
தந்து
செல்கிறாய்...

-தோழி பிரஷா-

Thursday, January 17, 2013

Share

வலியின் கனதி



ரோஜா
முட்கள்
நிறைந்த
அழகிய தோட்டத்தில்
அலங்கார பொருள்

மனம்
வலிகள்
நிறைந்த 
மனித உடலுக்குள்
உருளும்
உணர்வுப் பெட்டகம்

ஆகவே,
இயற்கை சொல்லும்
நியதி இதுதான்
வாழ்க்கை 
பிரகாசமானாலும், 
அதன்
வலியின் கனதி
மதிப்பீடு செய்ய
முடியாத
மர்மம் குவியல்.!

-தோழி  பிரஷா-

Wednesday, January 16, 2013

Share

புரியவில்லை..

பாசங்கள் பறிபோகின்றதா?
பாசங்கள் கூட வேசமானதா?
புரியவில்லை..

பாசத்தால் இங்கே
பாவப்பட்டவளாய்
பரிதவிக்கின்றேன்...
எங்கு உண்மை பாசம்
தேடி தேடி தோற்றேன் என்பதா?
தோற்கடிக்கப்பட்டேன் என்பதா?
புரியவி்ல்லை...

கண்கள் கூட கசிய மறுக்கின்றன
கல்லாகிய மனிதர்களால்..
வெந்நீரில் மேலே வாழ்வதாய்-மனம்
வேகின்றது உஷ்ணமாய்...

வெறுத்து ஒதுக்கிட நினைக்கின்றேன்
வேதனைகள்  முன் வந்த நிற்கின்றது
உரிமையே இல்லாத உறவுகள் எதற்கு
உள்ளம் கேட்குது என்னிடம்
பதில் என்னவென்று புரியவி்ல்லை...

கசிய மறுக்கும் மனங்கள் நடுவே
கல்லெறிபட்ட மான் ஆனேன்
பாசத்தால் அணைபோட்டு
வளர்த்திட்ட உறவுகள் எல்லாம்
பாசாங்கு செய்து மறைகின்றன
பாழாய் போன சுயநலத்தால்..
மனிதர்களையும் புரியவில்லை
நேரத்துக்கு நேரம் மாறும்
அவர்கள் மனங்களையும்
புரியத்தான் முடியவி்ல்லை.....

Tuesday, January 15, 2013

Share

உணர்வுகள்.



அன்று
உன் முகம்
காணாத நேரமதில்
முரண்பட்டு
வெளியானது
முரண்டுக்குணம்!

அறியும் வயதிருந்தும்
அறிய முடியாத
சூழ்நிலை கைதியாய்
உணர்வுகள்.

தலைக்கேறிய
கோபம்
தணிய மறுத்த
தனிமையின் கொடுமையது!

குழந்தையாய்
சிரிக்கின்றாய் இன்று
கூனிக்குறுகி
தலை குனிகிறது
உணர்வுகளுடன்
முரட்டுக்குணமும்!

பாவம் போக்கிட
புலம்பி அலைகிறேன்
நெஞ்சில் சுமந்து
திரிகிறேன்.
நாமத்தை உச்சரிக்கிறேன்
இருந்தும்
மீண்டும் ஒரு
வன்முறையாய்
தடைகள் விதிக்கிறது
தலைமை!

ஐ.நா சென்று
முறையிட முடியாத
பாவியாய்
மீண்டும் ஒரு
கைதியாய்
போராடிக் கொண்டிருக்கிறேன்...
Share

அழகிய நினைவுகள்....

அழகிய நினைவுகள் 
அழிவதில்லை மனதை விட்டு..!
வலி நிறைந்த நினைவுகள்
வலிக்க வைக்க மறப்பதில்லை...!
புரிந்துணர்வின்றி 
பிடித்தவர்கள் எம்மை
விட்டு பிரிந்திடலாம்-ஆனால்
பிரிவதில்லை எம் இதயத்திலிருந்து
அவர்களுடன் அவர்கள் தந்து சென்ற
“நினைவுகளும்”

-தோழி பிரஷா-

Monday, January 14, 2013

Share

உன் நினைவுகளை சுமந்தபடி.


பரந்து
இருட்டிக் கிடக்கிறது
வானம்.
அதில்
ஆங்காங்கே
பூத்துக் கிடக்கிறது
நட்சத்திரங்கள்
மனிதர்களின்
இன்பமும் துன்பமும் போல..

வானத்து சூரியன்
மறைந்து போயாச்சு
உச்சத்து நிலவும்
பயணிக்க தொடங்கியாச்சு,
ஊரும் உறங்கி
வெறிச்சோடிக் கிடங்கிறது
தெருக்கள்.
ஆனால்,
ஓய்வின்றி
துடித்துக் கொண்டிருக்கிறது
இதயம்
மறக்க முடியாத
உன் நினைவுகளை
சுமந்தபடி.

-தோழி பிரஷா-